அப்பாக்கள் தினம்

Vinushayini 0 Comments

குருதியைப்பாலாக்கி உணவூட்டிட தாயால் மட்டும் தான் முடிந்திடுமோ?
உழைப்பால் தன் குருதியை வியர்வையாக்கி அதில்  நமக்கு உணவூட்டிய தந்தையை போற்றிட இவ் ஒரு நாள் காணாதெனினும்,

“என் அப்பா” என்றிட்டதும், நம் அனைவரின் மனதில் எழும் ஆரவாரம்,

தினந்தினம் வாழ்த்துக்கள் கூறிடும் “என் அப்பா”விற்கு.
தந்தை என்ற பெயர் கூட “டாடி!”,”பப்பா” என மாறி விட, “அப்பா” என்ற ஓர் வார்த்தையின் ஜாலமோ தனி.

தந்தையர்கள் தினம் என்பதை விட அப்பாக்கள் தினம் என கூறி விடுவதில் ஓர் ஆனந்தம் இருக்க தான் செய்கின்றது.
ஆரம்ப பாடசாலையில் “என் அப்பா” என எழுதிய 5 வசனங்கள் எம்மில் யார்க்கு மறந்திருக்கும்?
உன் கண்டிப்பையும் மீறி , உன் கையை பிடித்து வீதி கடந்திட,இன்னும் உன் வளர்ந்த மகளுக்கு பிடிக்கும் அப்பா!.

வளராமலே இருந்திருக்கலாமென எவருக்கும் தோனாமல் இருந்திருக்காது,என்னைக்கேட்டால்,அப்பாவின் “சின்ன மகள்”ஆக மறுபடியும் மாறிட, நானும் சிறு குழந்தையாகி விடுகின்றேனே!

இன்றும் நினைவிருக்கின்றது, என்னை உன் கைகளில் இறுக்கப்பிடித்துக்கொண்டு “அப்பெரிய” பாடசாலையில் இடமெடுத்திட உன் முயற்சி!

அந்த மோட்டார் சைக்கிள்: அதில் உன் முன் உட்கார்ந்து செல்வது ஓர் ராஜகுமாரியின் பெருமிதம் தான்.ஒவ்வோர் குழந்தைக்கும் தன் தந்தை தான் முதல் Hero!வாழ்வின் ஒவ்வோர் அடியிலும் தன் குழந்தைகளின் முன்னேற்றத்தை எண்ணி எண்ணி சில சமயம் உன்னையே நீ மறந்திருப்பாய்!

பரிசளிப்பு விழாக்கள்; நான் வாங்குவ1து ஒரு சான்றிதழாகத்தான் இருக்கும் ; எனினும் முதல் ஆளாய் எனக்காக உன் வருகை இருக்கும் அப்பா!

என்ன நடந்திட்டாலும் என் அப்பா இருப்பார் என்கின்ற தைரியத்தை வேறு எவராலும் தந்து விட்டிட முடியாது அப்பா!.

ஒரு தந்தையாய் நீ தந்திட்ட வாழ்க்கைப்பாடங்களும் அறிவுரைகளும் உன்னிடத்தை நிறப்ப இன்னோர் உறவால் முடிந்திடாது அப்பா!

இவ் அனைத்து தியாகங்களிற்கும் நன்றி சொல்லி விட முடியாதெனினும்,
கூறி விடுகிறேன், அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்!

Image Courtesy: 
https://www.youtube.com/watch?v=-nBoKEBY34o
https://www.freepik.com/free-photo/father-and-daughter_1470067.htm