முதல் காதல்

Share

முதல் காதல்,

முடிவுரை அற்றது.

சிலரது வாழ்வில் அது இளவேனில் தென்றல்,

சிலரது வாழ்வில் அது ஆறாத ரணம்.

 

முதன்முதலாக

யாரோ ஒருவரிடம் இதயத்தை

தொலைத்த தருணங்கள்…

இன்றும் வார்த்தைகளால்

வர்ணிக்க இயலாத நிமிடங்கள்…

 

இன்பமாகவோ துன்பமாகவோ,

வடுக்களாகவோ புன்னகையாகவோ,

ஏதோ ஒரு மூலையில் அது

நிறைந்து தான் இருக்கிறது.

 

என்னவானாலும் முதல் காதலை

இழந்து விடாதீர்கள்.

அதன் நினைவுகளை தாங்கிக்கொண்டு

வாழ்வதென்பது மரணத்திலும் கொடியது.

 

எழுதியது : திவ்யா குலேந்திரன்

Image Courtesy: https://pin.it/1ZuL5zR 

 

 
Tagged : / /