மறைக்கப்பட்ட நேசம்…

Share

இருபது விழிகளிலும் காதல் வழிய

பத்து தலை கொண்டவன் காத்திருந்தான்

ஒரு தலை காதல் மயக்கத்தில்.

 

கைக்கு எட்டிய கனியாக இருந்த போதிலும்

விரல் தொட அனும‌தி வேண்டி நின்றான் கண்ணியமாய்

தீண்டாமல் கவர்ந்து சென்றான்

தீக்கிரை ஆக்கவில்லை அவளை…

 

காதலுக்கு ஏங்கி

அன்பு தொல்லைகள் செய்தானே அன்றி

ஒரு போதும் அவளை காயப்படுத்தவில்லை.

 

ஜானகி குடி கொண்ட அந்த நெஞ்சை

துளைத்தது ராமனின் பாணம்

அதே தேவிக்காக ராமனின் நெஞ்சை

துளைக்காமல் வி‌ட்டது ராவணன் காதல்…

 

Image Courtesy: https://bit.ly/3WkfqCF

 
Tagged : / /