நடிகையர் திலகம்-ரசிகையின் பார்வை

Share

மேலே கம்பீரத்தோற்றத்துடன் காட்சியளிக்கும், அம்மையாரையும் திரைப்படத்தில் அவர் பாத்திரமேற்று நடித்திட்ட கீர்த்தி சுரேஷ் அவர்களையும், இப்படத்தை நேசித்திட்ட எவராலும் பிரித்துப்பார்க்க முடிந்திருக்காது . இவர் நேர்த்தியான நடிப்பின்றி ,அம்மையார் கதை எவருக்கும் தெரியாமலே போயிருக்கும் .

நடிகையர் திலகம்- இப்பெயரில் ஓர் தமிழ் திரைப்படம் வெளியாகியதை உங்களில் எத்தனை பேர் அறிவர் என நான் அறியேன் .

எனினும், நடிகர் திலகம் என்றவுடன் சிவாஜி கணேசன் தானே என கேட்கும் எத்தனை பேரிற்கு நடிகையர் திலகம் என போற்றப்படுவது ,சாவித்திரி கணேசன் எனப்படும் நிஸ்ஸங்கர சாவித்திரி அம்மையார் எனத்தெரியும் என்பது நிச்சயம் கேள்விக்குறி .(ஏன் ,எனக்குக்கூட இத்திரைப்படத்திற்கு முன் அம்மையார்க்கு இப்பெயர் கொண்டு அழைப்பர் எனத்தெரியாது)

தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியான இத்திரைப்படம் தமிழில் இப்பெயரில்  2018ல் வெளியானது.

சரி அப்படி என்ன இத்திரைப்படத்தில் நீ கண்டுவிட்டாய் என என்னிடம் கேட்டவர்களிற்கு என் பதில் இக்கட்டுரை .

எங்கே ஆரம்பிப்பது எனத்தெரியவில்லை…

ஹ்ம்ம்

திரைப்படத்தின் அலைக்காக சேர்க்கப்பட்ட பாத்திரங்களின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கின்றது திரைப்படம்.(மன்னிக்கவும். இந்தக்கட்டுரையில் ,எங்கும் இந்த இடைச்சேர் பாத்திரங்களைப்பற்றி பேசப்போவதில்லை )

கட்டுரையின் நீளத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ,என்னைக்கவர்ந்திழுத்து கட்டிபோட்ட ஓரிரு காட்சிகளை பற்றியும், இக்கதையில் காண்பிக்கப்பட்ட அம்மணி தான் நிஜத்தில் இருந்த சாவித்திரி அம்மா எனின், அம்மையாரின் நான் கண்டு லயித்துப்போனதையும் பற்றி மட்டுமே இங்கு பகிரப்போகிறேன்.

அம்மையின் கதையில் ஆரம்பம்.
தெலுங்கு சினிமா துறையின் தேர்ச்சிக்கண்ட இயக்குனர் , அவர்களால் படமாக்கப்படவிருக்கும் ஓர் காட்சி.நடிகையின் கண்ணீரில் கதை சொல்லும் காட்சி .

தன் திறமையில் எத்துனை நம்பிக்கை இருந்திருந்தால் , அனுபவம் வாய்ந்த ஓர் இயக்குனர் முன்னால் ,glycerine எனும் கண்ணீரை வர வைத்திடும் திரவம் இல்லாமலே ,காட்சியை நடித்துத்தருகிறேன் என்ன சொல்ல முடியும்?

அதில் நம் மனதை ஈர்த்திடும் நிகழ்வு.
இயக்குனர்: இரண்டு கண்களிலும் அல்ல,ஒருக்கண்ணில் மாத்திரம் கண்ணீர் வர வேண்டும்.
அம்மை: ஆஹ் …
(காட்சியில் தன்னிலையில் அமர்ந்து விட்டு..
எத்தனை துளிகள் வேண்டும்,ரெட்டிகாரு?

எனக்கேட்க ,இவரும் இவள் திமிராகத்தான் கேட்கிறாள் என எண்ணிக்கொண்டு, ரெண்டு துளிகள்,உன் ஒரு கண்ணில் மட்டும் “என்கிறார் .
சொன்னபடியே,ஒரு கண்ணில் மாத்திரம் துளிகள்.. ஆச்சர்யத்தில் அனைவரும் மிதந்து போகிறார்கள் .

இக்காட்சி நிஜத்தில் நடந்தேரியதா ,இல்லை திரைப்படத்தின் அனுபவத்திற்காக சேர்க்கப்பட்டதா எனத்தெரியவில்லை .எனினும் , என்னவொரு பாத்திரச்சித்தரிப்பு.

அவரைப்பற்றி அறியாமனத்திலும் சுருக்கென தையல் இட்டு பிடித்துக்கொள்ளும் அக்கணம் .
(இந்தக்காலத்து எத்தனை, heroine entry களுக்கு இப்பாதிப்பை ஏற்படுத்த முடியும்?)

இதன் பிறகு என்னைக்கவர்ந்த சில நொடிகள் …

ஜெமினி கணேஷன் …அக்கால காதல் மன்னன். திரைப்படங்களில் மாத்திரமல்ல,நிஜத்திலும் தான் .

ஏற்கனவே திருமணம் ஆனவரிடம் காதல் கொண்டு மூத்த மனைவியின் சம்மதத்தோடு அவரையே திருமணம் செய்துகொள்கிறார் அம்மையார்.

காலம் நன்றாக கழிகின்றது . சிற்சில சந்தர்ப்பச்சூழ்நிலைகள்,அம்மையாரிடம் சிறு வெறுப்பை ஏற்படுத்திட.இன்னொரு பெண்ணை நாடுகிறார் ஜெமினி.இதைப்பற்றி அம்மையார் அறிந்துகொள்ளும் காட்சி அதன் விறுவிறுப்பை நம் யாராலும் மறக்க முடியாது.இவ்விடத்தில் ,கதையின் நாயகி;கீர்த்தி சுரேஷ் தான்.அவர் நடிப்பல்லா விடின்,இந்நொடிகள் இவ்வளவு நம் மனதில் பதிய வேறு காரணங்கள் இல்லை .

இத்துடன்,ஜெமினியின் தொடர்பை அவர் துண்டித்து விட ,தனி மரமாய் ஆகிறாள்.
இல்லை, தனி மனுஷியாய்…

இதற்குப்பின் தான் என்னை கட்டியிழுத்து விட்ட காட்சிகள்; ஒரு பெண்ணாய் இவ்வுலகில் நீ ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்கள் ஏராளம் என காதிற்குள் உரைத்திடும் காட்சிகள்.

சட்டென்று மனதிற்கு வந்த காட்சிகளை மட்டும் சொல்கிறேன்.

மாடமாளிகை, பிரஷர் கார் என வாழ்ந்த பெண் , TAXI யில் செல்கிறாள் ஒரு நாள்.தெரியாத ஒரு ஓட்டுநர்….அந்த காட்சியை மாத்திரம் நேரமிருந்தால் பாருங்கள்.
அவர் மகள் திருமணத்திற்கு தேவை இருக்கின்றது என அறிந்ததும், தேடுகிறாள்;தன்னிடம் ஏதும் இல்லை என்றவுடன்,தன பட்டுப்புடவையை உடனே விற்று சிறுதொகை பணத்தை கொடுக்கிறார்.

முதலே,அவர் நல்ல நிலையில் இருக்கும்போது ,பலருக்கும் பல விதத்தில்; காணி , நிலம் ,நகை என உதவி செய்திருப்பார்;எனினும்,தன் புது சினிமாவினால் ஏற்பட்ட கடன் தொல்லைகள் அடிமாகிவிடவே, அவர் கொடுத்தவற்றை கேட்க ,தான் கொடுத்தவரிடமே தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தும் காட்சி; எந்த உறவும்,உங்கள் கஷ்டத்தில் திரும்பி பார்க்காது என எம்மையே “பிறர்க்கு நீ இனி உதவி செய்திடாதே “என உணர்த்திட்டாலும் , பின்வரும் காட்சிகளில் இந்த ஓட்டுநர் கேட்டவுடன்,வாரிக்கொடுக்கிறாள்;சிலர்க்கு இவ்விடத்தில் அவர் ஏமாளியாக தெரிந்தாலும், எத்துணை …(என்ன சொல்லலாம்)..”நல்ல மனது” (வேறு யார்க்கு சொல்ல முடியும் இக்காலத்தில்)

எத்துணை நல்ல மனது இவர்க்கு ..நிச்சயமாக இறுதிக்காலத்திலாவது நாட்டுமக்களின் கவனம் இவர் நிலைமைக்கு கிடைத்தமை,,அவள் செய்த புண்ணியங்களின் விளைவு தான்.

ஹா இன்னொருவர்,இவரிடம் வேலைப்பார்த்த,இவரிடம் மிகவும் நம்பிக்கையை சம்பாதித்த ஒருவன்..அவனும் அம்மையாரை ஏமாற்ற,அவனை பார்த்தபோது,சிறுபுன்னகையுடன் அவனைத்தவிர்த்து விடுகிறார்.

ஹ்ம்ம்..சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றது.
ஒன்று சொல்லி முடிக்கிறேன். உங்கள் வாழ்வின் நீங்கள் செய்யக்கூடாது எனத்தெரிந்துகொள்ள வேண்டியவை நிறையவற்றை சொல்கிறார், அம்மையார்..

நிச்சயம்,ஒரு மாலைப்பொழுதை இப்படத்திற்காக ஒதுக்கி அனுபவியுங்கள்,இவ்வம்மையின் இறுதி பாடங்கள்.

அவர் ரசிகையா நீ? என கேட்டால் ,நிச்சயமாக இல்லை. இப்படத்திற்கும் இக்கதைக்கு மாத்திரமே நான் ரசிகை..

 

Image Courtesy :

 
Tagged :