வரவேற்போம் மலரும் புத்தாண்டை

Share

உலகே உரையாட ஒரு மொழி

பிறந்ததோ 

அது ஆங்கிலம் எனும் வழியில் 

தவழ்ந்து வந்ததோ

அதற்கு பிறப்பு எனும் நாளும் வருடம் 

தோறும் வாசம் வீசுதடி 

வீசும் காற்றில் வீரநடை போட்டு 

வந்ததடி இன்றும் அந்த 

ஆங்கில புது வருட பிறப்பு….

 

மகிழ்ச்சியில் மத்தாப்பாய் 

புதுமையில் பூவாய்  பூக்க 

பூமரமாய் நான் உன்னோடு உலா வர 

ஓடி வந்த இருப்பது இரண்டும்

 இரும்பு கவசம் போட்டு 

உலகையே பூட்டி வைத்த கொரோணாவை 

கொன்றழித்து பாடை கட்ட 

பாட்டும் பாடுதடி…  

 

நானும் வர நானும் வரவென்று 

நாற்பது பண்டிகையும் 

நான்காயிரம் கோவில்களும் 

கதவு திறக்க காத்திருக்க 

காதலர் தினமும் 

கை கோர்க்குதடி….  

 

புதுவருடமும் பிறந்தது என்று 

நடந்ததை நினைத்து 

வருந்தாது வருவதை ஏற்ற 

வாழ்க்கையை வண்ணமாக்கி 

வாய் நிறைய சிரிப்பு வருடம் முழுவதும் 

சிறப்பும் பெற சின்னக்கவியும் 

சொன்னேனடி…

  

Written by: Uthayanathan Suventhiran

Image Credits: Author

 

 
Tagged : /