உசுரே நீதானே
உறைஞ்சி போனேனே…
மனசு திசைகெட்டு
அலையக் கண்டேனே…
மஞ்சப் பூவெடுத்து
மார்பில் அணைச்சவளே
என்னை அணைச்சிக்கிட்டு
இதமா போயேண்டி…
கொஞ்சும் விழியழகி
குத்தி நிற்கும் முடியழகி
பாதி இடை காட்டி
பரிதவிக்க விடலாமா…
சூரியப்பார்வையில
சூடு ஏத்திப்புட்ட
சூரிய காந்தியையும்
சொக்க வச்சிப்புட்ட
பூக்களின் நடுவில்
பூங்காவே நீதானே
பூவாய் எனைக் கொய்தாய்
பாவி பழரசமே…
காமன் தொடுத்த
மலரம்பும் தோற்கும்
காந்தக் கடைவிழியில்
கண்ணே எனை பார்த்தால்…
மஞ்சள் நிலவே
மாமரத்துக் கிளையுறங்கும்
பூங்குயிலே
மாருதமே மணிக்கொடி இடையே
ஒரு பூவையேனும் தாராயோ
உன் காதல் பதில் எழுதி….
By: Piramilan Sutheasakumaran
Image Courtesy : https://www.elsetge.cat/myimg/f/11-111297_smile-girl-hd-wallpaper-cute-girl-with-flower.jpg