அவள்-2

Share

அதிகமாக கூறி விட்டேனோ..என நினைந்துவிட தோன்றியது.

ஆனால், 15 வருட கனவை தானே சிதைத்துக்கொள்ளப்போகிறாள் என அறிந்தும்..தன் நேரத்தை சில்லறையாய் சிதைத்திட எவ்வாறு மனம் வந்திருக்கும் அவளுக்கு!

என்றோ ஓர் நாள் இதற்கான தண்டனையாய் அனுபவிப்பாள் என அறிந்ததாலோ என்னவோ ,வழமையாக அவள் வழி தவறிப்போகும்போது எச்சரித்திடும் இயற்கைக்கூட அன்று மௌனமாகத்தான் இருந்தது .

 

நாட்கள் கடந்தன.

 

அப்படி என்ன தவறு செயதால் ,கைத்தொலைபேசி அவளை என்ன செய்து விட முடியும் எனக்கேட்டிடும் உங்கள் கேள்விகள் ஞாயமானவை.

இக்கேள்விக்கான பதில் , அவள் அதன் பிறகு அனுபவித்த துயர்களின் பட்டியலாக இருக்கும் .

 

அமைதியான இரவு.பக்கத்து வீட்டு குழந்தையின் அடம்பிடி அழுகையின் சத்தமும்,அதனை கேட்டு தடுமாறிய எதிர் வீட்டு நாயின் குரைத்தலும் , ஜன்னலருகே நிழலரசனாய் பறந்து நிற்கும் சீதாப்பழ மரத்தின் கிளைகள் அசைந்திடும் சத்தம்;அவளுக்கு மட்டும் கேட்கும்: இவை தன்னிடம் ஏதோ சொல்வதாய் நினைத்துக்கொள்ளும் பேதை.

குளிர்ந்து போன ஜன்னல் கம்பிகளை பற்றிப்பிடித்து அழக்கூடாது என நினைத்தவாறே அழுகிறாள்.

இக்கண்ணீர்த்துளிகள் , கவலைப்பட்டு அவள் சிந்தியவை எனக்கூறிவிட முடியாது.ஏனெனில் கண்ணீரின் குளிர்ச்சியை தான், தன் கைகளில் உணர்கின்றேன் எனத்தெரியாதவளாய் அவ்விரவு தன்னை இழுத்துசென்ற அம்முன்னோரு நாளின் ஞாபகப்பக்கங்களிற்க்குள் செல்கின்றாள்

தெரிந்திருந்தது அவளுக்கு;

இன்றிரவை ,இந்த பக்கங்கள் இன்னும் ரணமாக்கும் என அறிந்திருந்தாள் அவள்:

இருந்தும் அப்பக்கங்களுள் செல்கிறாள்அவள்… .

Image Courtesy:
http://favim.com/orig/201107/08/blond-blonde-girl-hair-water-Favim.com-98754.jpg

 
Tagged : /