அவள்-4

Share

வயதில் மூத்தவரையும் அவர் வார்த்தைகளை நம்பி அவர் பாதையில் நடந்திடு என கேட்டிட்ட அவள் இள மனதிற்கு என்ன தெரிந்திருக்கும்?தன் வீட்டினுள் இருந்த குழப்பங்களையே உலகமாய் கொண்ட மனதிற்கு தெரியவில்லை, இதுவும் உன்னை இழுத்து கீழ் தள்ளக்கூடும் என!

என்ன நடந்திருக்கும்! பெருதாய் ஒன்றுமில்லை! ஓர் காதல் விண்ணப்பம்!வாழ்வில் முதல் காதலை மறந்தவர்கள் கூட முதல் காதல் விண்ணப்பத்தை மற்ந்திருக்க மாட்டார்.

ஓரிரு நாள் பார்த்த பழக்கத்தில் காதல் மலர்வது படங்களில் எளிதான ,இளதான ஓர் காட்சியாய் அமையலாம். நிஜ வாழ்க்கையில், அவள் நடத்தையில் அவளுக்கே ஏற்பட்ட சந்தேகம்!

சுற்றி முற்றி தனிமைக்காடு மற்றும் கண்களில் தெரிய சொல்லிடம் இல்லா கவலையாக ஓர் பக்கம் !

இறுதியில் ……இல்லை, இல்லை ஆரம்பத்தில் இருந்தே அவள் தைரியமானவள்!பக்குவமாக சமாளிக்கிறாள்: எடுத்து விளக்குகிறாள்,கேட்பவர் எவராயினும் , அவள் இதழ் வெளி வரும் வார்த்தைகளில் இயையாமல் இருக்க மாட்டனர்!

காதல் விண்ணப்பம், ஓர் புன்னகையோடு விடைப்பெற்று செல்ல , அவளுக்கு கிடைத்த பாடம் , “ஓர் இடைவெளி”.

என்ன? முதல் காதல் விண்ணப்பம் இச்சிறிதாகவா முடிந்தது?

வார்த்தைகளின் பரிமாணம்;அவள் மனதில் கொண்ட குழப்பங்களின் அளவு.

எவ்வளவு மனப்பக்குவமும் துணிச்சலும் இருந்திருந்தால் ; தன்னை விட வயதில் மூத்தவாரகவும் அனுபவமும் கொண்ட ஒருவரிடம் தன்னையும் தன்னிலையையும் புரிய வைத்து ,அவர் முக நகையில் முடித்து இருப்பாள்?

இடைவெளி.. அவளை பரந்த சிந்தனையுள் குளிர்ந்த மலராய் அமரச்செய்தது. யோசித்தாள். ஒரு வேளை நம் நடத்தையில் தான் கேள்விக்குறியை வைத்திட வேண்டுமோ என்று..

தனிமை ,தன்னடத்தையை சந்தேகப்படவைக்க , தன்னிலை அறிதலின் அவசியத்தை உணரும் அவள் …

 

Image Courtesy: https://ak3.picdn.net/shutterstock/videos/1918393/thumb/1.jpg?i10c=img.resize(height:160)

 
Tagged : / /