அவள்-6

Share

ஆமாம். ஒரு கணத்தில் சாய்ந்திட்டாள் . ஆனால் , இச்சாய்தலை பற்றி சொல்லும்முன் , பேசிடம் பெறக்கூடிய இன்னும் பல நபர்கள் உள்ளனர் கதையில்.

அவள் கல்யாணப்பேச்சை பேசி ,அவள் வேலைத்தளத்தை மறந்து விட்டோம் பாத்தீர்களா?

சிறந்த இடம். ஓரிரு வருடங்களிற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ,ஆனால் பலவருட முன்நோக்கு கொண்ட ஒரு பல்தேசிய வலைத்தளச்சந்தை நிறுவனம் . இவள் இணைய ஓரிரு வருடங்களிற்கு முன்பு தான் இவள் சேர்ந்த பிரிவை ஆரம்பித்தார்களாம்.

நேர்முகத்தேர்வில் இவள் பேச ஆரம்பிக்கும்போதே இவள் சுயவிபரக்கோவையில் எழுதப்பட்ட குறியீட்டின் அர்த்தம் தான் ,இவள் இணைக்கப்பட்ட இந்த பிரிவு. ஆனால் ,நேர்முகத்தேர்வு அன்று காலையில் இருந்து இடம்பெற்ற அமளித்துமளியால் ,(அங்கு இருந்தவர்களிலே )கசங்கிய ஆடையும் , கிழிந்த பொத்தானிற்காக குத்தப்பட்ட ஊசியும் ,இறுதி நேரத்தில் சென்றடைந்த காரணத்தினாலும் தான் விலக்கப்பட்ட குறியீடே அது எனத்தான் அத்தொலைபேசி அழைப்பு வரும்வரை அவள் நினைத்திருந்தாள் .
எனினும்,வந்தவர்களில் இவள் மட்டுமே தெரிவானாள் என்பது,அன்று கண்ட எந்த முகத்தையும் மீள அவள் சந்திக்காததிலேயே அறிந்துகொள்ள முடிந்தது.

வேலையில் இணைகிறாள். தனியார் நிறுவனங்களில் எப்பொழுதும் புதுமுகம் ஒன்றை இணைக்கும்போது ஏற்கனவே இணைந்த அனுபவம் வாய்ந்த ஒருவரை,வழிகாட்டியாக நியமிப்பதுண்டு.இவளுக்காக நியமிக்கப்பட்டதோ ஒரு தமிழ்ப்பெண்.(புது இடத்தில் மொழி தெரிந்திருந்தாலும் ,நம்மொழி,நம்மினத்தவர் ஒருவரை மனம் நாடுவது இயல்பு)இதை விட என்ன வேண்டும்,அவள் ஆறுதலடைய?
இதை விட இப்பெண்ணிற்கு இக்கதையில் இன்னுமொரு முக்கியத்துவம்,கதையின் திருப்பத்தில் உண்டு.

மிகவும் அன்பாகவும்,பணிவாகவும் செய்யப்பட வேண்டிய வேலையை எடுத்தியம்பிய அவர் ,தேவைப்படுமிடத்தில் ஒரு தமக்கையாய் கோவப்படவும் தயங்கியதில்லை.

நல்லது,கெட்டது எது என எப்பொழுதும் இவளிற்கு அறிவுரையாகவும் விளையாட்டாகவும் சொல்லவே,இவள் கதையின் தேவையாக அமைகிறார்.

ஆமாம்.இவ்வேலைத்தளத்திலே இன்னும் பல முகங்கள் :இவள் தன்னுடன் கதைக்கிறாள் என்பதற்காகவே,இவள் தன்னை காதலிக்கிறாள் எனச்சொல்லித்திரிந்த ஒருவர் ,நல்ல நண்பனாக இருந்து,பொய்க்கண்ணீர் வடித்து சிறு சிறு தொகைப்பணம் கேட்டு சொகுசு கண்டவன்,பல பெண்களிடம் காதல்பாஷைப்பேசி வயப்படுத்தும் ஒருவன்(தெளிய முன்பு இவளும் அவன் வலையில் சில நாள்,அவன் பேச்சில் மயங்கித்தான் இருந்தாள் .பரவாயில்லை,அவன் முகம் சீக்கிரமே கிழிந்தது),இன்னும் பல முகங்கள்.ஒவ்வொருவரின் சுயரூபம் தெளிய தெளிய வாழ்க்கையை விட மனிதர்களை கண்டல்லவா நான் பயந்திருக்க வேண்டும் என்ற ஓர் குழப்பம்.

ஒரு பக்கம் வீட்டிலே ,பெற்றவள், தான் சொன்ன மண ஒப்பந்தத்தை செய்யவில்லை என தள்ளி வைக்க,இங்கு பல பல வித மனிதர் செருப்படியாய் ஏமாற்ற, சென்ற பாகத்தில் சொல்லி முடித்தேனே ,அந்த புல் …. அப்புல்லின் வருகை…நன்று கேட்டுக்கொள்ளுங்கள் ;இவள் ஒரே பலவீனம், தன்னிலை தற்பெருமை அறியாமல் நிலைகுலைந்து நிண்டமையே .
என்ன செய்திருக்க வேண்டும் என எண்ண முன்பே, சரிகிறாள் அங்கு அவள்….

 

Image Courtesy: https://cdn3.mycity4kids.com/images/article-images/web/headersV2/img-20170727-597a2fbb0f1d1.png

 
Tagged : /