அவள்-1

Share

அவள்.

கதையின் மையம்.

அழகு :உடலின் போர்வையில் தான், என கருதும் வெளுத்துப்போன மனிதர்கள் மத்தியில்,தன் நிறம்  இறைவனின் வரம் என நினைந்துகொண்ட பேரழகி.

கயல் மீன்களிரண்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது பிரம்மன் எடுத்த புகைப்படம், அவள் கண்கள் .

பிரம்மனின் அளவுக்கோலின் செல்லக்குழந்தை அம்மூக்கு.

அழகிய சிறு உதடுகள்.

தெரிந்தவரை , தன் சிரிப்பாலே வரவேற்றிடும் பற்கள்.

அளவின் குன்றிய உயரம்

அளவான அலை கொண்ட கூந்தல்.

அழகின் பாதியை பெற்றுக்கொண்டதாலோ என்னவோ..

இன்னல்களும் குறைவில்லாமல் வந்து சென்றது அவள் வாழ்வில்!

நடுத்தர வாழ்க்கைச்சூழல்.

எதற்கும் ஆசைப்பட தேவையில்லையெனும் மனம்.

பாடசாலைக்காலத்திலும் கல்வியை குறைவில்லாமல் கற்று கற்பித்தோரின் கருத்தை வென்ற மாணவி!

சக மாணவர்கள் வழித்தவறும் போதும் தன் அன்பாலும் பேச்சாலும்

தன்பாலீர்த்துக்கொள்வாள்.

பாடசாலைக்காலத்தை நினைக்கும்போதே நெருடலை ஏற்படுத்துமளவு நண்பியொருத்தி மீது கொண்ட ஒரு சிறு கோவம்.

உயர்தர பரீட்சை நெருங்க நெருங்க,கவனக்கலைப்பான்களும் அதிகரிக்க ,தடம்பிரளப்போகும் வாழ்க்கையின் முதல் அறிகுறியாய் கிடைத்திட்ட கைத்தொலைப்பேசி. தன்னை வேறு திசையில் அழைத்துசெல்லும் என்ற அபாய ஒலியையும் மீறி தன் கைகளிற்குள் அணைத்துக்கொள்கின்றாள்.

உயர்தர பரீட்சையும் முடிகின்றது.

பாடசாலை வாழ்வை முடித்து தானும் பெரிய மனுஷி என்ற எண்ணத்தோடு வெளி உலகத்தின் சவால்களை சந்திக்க வெளிக்களம் நோக்கி இரங்கிடும் அவள்!

 image courtesy:  http://webneel.com/i/0/6-realistic-tamil-woman-painting-by-ilayaraja/06-2015/d?n=252