இளவேனில் துளிர் விட தொடங்குதையா
அது தொட்டதெல்லாம் சிவக்க சிறுகதை
சொல்லுதையா…
சின்ன பொண்ணுக்கு சித்திரையாம் அது
சிங்கார வட்டம் போட்டு சுத்துதையா…
முதல்நாள் முத்தத்தில் பலகாரமும் பலகால
பாசமெல்லாம் பாய்விரித்து பந்தி
போடுதையா…
மருந்து நீராம் மருத்து நீர் அது மணி நேரம்
பார்த்து பெரியார் தேய்த்துவிட்டதில் ஆசி
பொங்குதையா நமக்கு ஆசி பொங்குதையா…
அவளுக்கு பச்சை எனக்கு மஞ்சள் என்று
விண்ணுலகே வியக்க வண்ண சித்திரம்
சித்திரையை சீண்டுதையா…
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு
சிவஞானம் என்று சின்னஞ்சிறு வண்டுகள்
ரீங்காரம் செய்து கை கூப்புதையா…
சிங்கள நண்பனின் வீட்டில் பாற்சோறும்
பச்சடியும் பகிர்ந்துண்டு உல்லாசமாய்
பண்ணிசையில் பல கையும் கோர்க்குதையா…
இளயவனுக்கு இருபது எனக்கு எண்பது
என்று படிகட்டாய் வழர பாட்டி தந்த கைமுழுத்தம்
முதல் காசாய் உண்டியலை உதைக்குதையா…
மாசுபடா உறவை உலகில் ஊற்றெடுத்து
ஏரியாய் ஓட வேண்டி பழங்கால பண்பாட்டை
பாடுமீனாய் முதற்பருவ சித்திரையில் சிங்கள
தமிழ் புத்தாண்டும் நல்வாழ்த்து உரைக்குதையா…
Image courtesy: Author