இயற்கையை ரசிக்க வைத்தது தனிமை,
இசையை உணரச் செய்தது தனிமை,
அன்பைத் தேட வைத்தது தனிமை,
அறிவை வளரச் செய்தது தனிமை,
கனவுகள் காணச் செய்தது தனிமை,
கவிதை பாடச் சொன்னது தனிமை,
சிந்தனை செழிக்கச் செய்தது தனிமை,
உண்மை உரைக்கச் செய்தது தனிமை,
குறிகளை கடக்க வைத்தது தனிமை,
குருதியை கொதிக்கச் செய்தது தனிமை,
குரல் கொடுக்கத் தூண்டியது தனிமை,
இழப்பினை புரியச் செய்தது தனிமை,
மௌன மொழி விளங்கச் செய்தது தனிமை,
வாழ்வின் விதி அறியச் செய்தது தனிமை,
மன நிம்மதியை விதைத்தது தனிமை,
தனிமையில் கிடைத்தது வாழ்விற்கு இனிமை.
Written by : Thushanika Vijayakumar
Image Courtesy:
Cover Image – https://shorturl.at/5B1yd