வெற்றி…

Share

வெற்றி …

துரத்துபவன் கண் பின்னும்
துரத்தாமல் கிடைத்திடும் என நம்புபவனின் கை மேலும்

தவழ்ந்திடும் குழந்தை.

நிச்சயமாய் குறுக்கு வழி இல்லா ஒற்றை வழி பாதை தான்..

குறுக்கு பாதையில் செல்ல நினைத்த அனைவரிற்கும் தெரிந்திருக்கும் ..

தலையில் கொட்டி எழுந்து ஓடிட சொல்லுமென ;

எட்டிப்பிடிக்க முடியா கனி என நினைத்திடும் அனைவருக்கும்
இல்லை இல்லை ஓடி வந்திடு என்டிடும்;
ஓடி முடிந்து, கிடைத்திடும் என எண்ணின் ;
இல்லை உன் அதிர்ஷ்டம் காணாதடி என மறுபடி ஓட விட்டிடும்;

பாழாய் போன வாழ்க்கை .. பிறருக்காகவே வாழ்ந்திட வேண்டிய நிலையில்
இது
“சீ சீ இந்த பழம் புளிக்கும் ” என திரும்பி வந்த வழி நடந்திடவும் வழி இல்லாமல்,

“எழுந்திடு ஓடிடு” என ஆழ்மனம் சில நேரங்களில் விழித்திட வைத்தாலும்,

நமக்கு இது எப்படியும் கிடைக்காது என எண்ணி விடும் மனம்,

என்ன சொல்லி எழுந்து வர வைப்பது இந்த மனத்தை?  எனும் எண்ணத்தில் கழிந்திடும் நாட்கள்..

தோல்விக்கும் ஒரு சவால் இருந்திட தானே வேண்டும் !

ஓடிடலாம்… தோல்வி நம்மை வென்றிடும் வரை..

போட்டியாளர்களை இல்லாமல் ஆக்குவதல்ல வெற்றி
போட்டியாளர்களை மிஞ்சுவதே வெற்றி – ஆண்டவர்

 

Image Courtesy : https://theimpactnews.com/wp-content/uploads/2017/02/Steps-to-Success-628×353.jpg

 
Tagged : /