ஆடியில் தேடி விதைத்தோம்
அதை அறுவடையாய் தையில் பெற்றோம்
ஆனால்
சேற்றில் குளித்து செவ்வனே மண்ணை தூற்றிய ஆவுக்கும்
அவன் வேண்டியபடி பருவத்திற்கு மழையும் மனதார தந்த சூரியதேவனுக்கும்
நாவாற நன்றி சொல்ல நாளொன்று வந்ததோ….
இயற்கையின் இதயமாய் சூரியனும்
இறைவனின் அருளாய் ஆவும்
விருந்தினராய் வரச்சொல்லி
வாசல் எங்கும் வண்ண கோலம் வணக்கம் சொல்ல
சூரியனும் கண்விழிக்க
கைகூப்பி பொங்கலோ பொங்கல் என்று பட்டாசும் வெடித்து
வந்தாரை வரவேற்க அந்த நாளும் வந்ததோ….
புத்தரிசியை புதுப்பானையிலிட்டு
பக்குவமாய் பொங்கியெடுத்து படையலும் போட்டு
பலவித பரிமாறலுடன் உறவுகளும் கைகோர்க்க அந்த நாளும் வந்ததோ…
உலகமே பசியாற பார்ரெல்லாம் உழைக்கும் உழவருக்கும்
நன்றி சொல்லி அனைவருக்கும் பொங்கலோ பொங்கல்
என்று என் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Written by: Uthayanathan Suventhiran
Featured Image: https://bit.ly/34MDHJk
Content Image: https://bit.ly/34N0RiJ