எல்லோருக்கும் ஓர் கதை உண்டு

Share

  ஒரு ரயில் பயணத்தின் போது இளம் வாலிபன் ஒருவன் தன் தந்தையிடம்,” அப்பா,பாருங்கள் மரங்கள் எல்லாம் பின்னே செல்கின்றன ” என ஆர்ப்பரித்தான்.

அந்த வாலிபனது சிறுபிள்ளைத்தனத்தை ரயிலில் வந்த ஒரு பெண் வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். மறுபடியும் அவ்வாலிபன், ” அப்பா, மேகங்கள் நம்முடனேயே மிதந்து வருகின்றன ” என்றான்.

இதைக் கேட்ட அந்த பெண் அவனது தந்தையிடம்,” ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல வைத்தியரிடம் காண்பிக்க கூடாது? ” என கேட்டாள். அதற்கு அவர்,  ” நீங்கள் சொல்வது சரிதான், நாங்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து தான் வருகிறோம். எனது மகன் பிறவியிலிருந்து கண் பார்வையற்றவன். இன்று தான் அவனுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பார்வை கிட்டியது ” என்றார்.

  நாம் அடுத்தவரின் வாழ்க்கை பற்றி ஏதும் அறியாமலேயே ஒருவரை இலகுவாக மதிப்பிடுகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உண்டு என்பதை நாம் உணர்வதில்லை.

ஒருவனின் உண்மை தெரியாமல் அவனை மதிப்பிடாதே. அந்த உண்மை உன்னை ஆச்சரியப்படுத்த கூடும்.

Don’t be judgemental!!!

 

By: Aarthi Rajaratnam

Image Courtesy: https://psychology-spot.com/wp-content/uploads/2016/11/criticizing.jpg

 
Tagged : / /