அன்று விடுமுறை நாள்
அதிகாலை பனிக்காற்று
மெல்லிய மழைச்சாரல்
நீண்ட நெடிய தார் சாலையில்
தனிமையில் கைகோர்த்தபடி நாம்…
தெருவோர டீக்கடை
நுரை நிரம்பிய குவளையில்
இதமான சூட்டில் தேநீருடன்
என் தோளில் சாய்ந்தபடி நீ
இமை மூடியபடி கனவில் நான்
சட்டென விழித்து கடிகாரம் பார்த்தேன்
முள் நான்கை நெருங்கியது.
இனிதான விடியலில் வந்த
கனவு தானா இது?
By: Thivya Kulendran
Image Link: https://pin.it/71mW1bj