நினைவிருக்கிறதா?
எம் இரு விழிகள் முதல் முதலில் சந்தித்த தருணம்.
என் இருதயம் சற்று வேகமாக அடிக்க தொடங்க,
உதட்டில் என்னை அறியாமல் ஓர் புன்னகை.
கண்களில் காணும் காட்சியோ
என்னை மெய் சிலிர்க்க வைக்க,
நாணத்தால் என் இமைகள் கவிழ்ந்தன.
நிமிடங்கள் பல அல்ல
அச் சில வினாடிகள் தான்,
இரு விழிகளும் சங்கமித்த அவ் ஓர் நொடி.
என்னை அறியாமல்,
உன்னிடம் இழந்தேன்,
என் இதயத்தை.
Image Courtesy : https://pin.it/jkGz8Vy