காதலித்திடாதீர்கள்!

Share

கவிதைகள் எழுதி பழக்கமில்லா கைகளையும் எழுதிட வைக்கிறது,இக்காதல்.

கொடிது கொடிது, வறுமை,
அதனிலும் கொடிது இளமையில் வறுமை.”
என பாடிய ஔவைக்கிழவியும் , காதலில் விழுந்திருந்தால்,இளமையில் எது கொடிது என சரியாக பாடியிருப்பாள்.

சிரிப்பாய் தானிருக்கிறது, இவ்வாழ்வின் விந்தையை நினைந்திட்டால்..
உணரும் தனிமயின் மருந்தைக் காட்டிடும் இதுவே,

தனிமையின் நோயாகவும் மாறிவிட,

வெறும் தனிமை, இந்த நோயை விட பெரிது என நினைந்திட,

மனம் கோரும் ஒரே விடுதலை,

தனிமையில் முடிகிறது

பல வழிகளில் கண்ட காதல்,
உண்மை அல்ல என உள்ளே உரைத்திட,
கொஞ்சம் தனிமையை உணர்ந்து பார் என நீ கொடுத்திட்ட தண்டனை,

இல்லை இல்லை இக்காதல் தந்த தண்டனை…

வயது கோளாறு என பெரியவர்களாலும்
வாழ்வின் ஆதாரம் என சில கற்பனை மேகங்களில் மிதந்திடுபவர்காளும்

மிக எளிதாய் வர்ணிக்கப்பட்டும் ,

எவராலும் இது தந்த தனிமையை வரைவிலக்கப்படுத்திவிட முடிந்ததில்லை.

இவ்வரக்கன் அவ்வளவு கொடியவனோ….
இல்லை இல்லை இக்காதல் கொடியது…

இல்லை எனச்சொல்லத் தோன்றின் ……

 

Image Courtesy: https://cdn.pixabay.com/photo/2016/03/16/16/27/puzzle-1261138_960_720.jpg

 
Tagged :