உலக பேசுபொருள் – COVID-19

Share

2020 ஆம் ஆண்டின் பாரிய சோதனையாக COVID-19 ஐ அறிமுகப்படுத்தலாம். இதன் ஆரம்பம் சீனாவின் ஹூபே மாகாணத்தின் Wuhan நகரத்தில், 2019 நவம்பர் இல் பதிவாகியது. கடந்த 5 மாத காலப்பகுதியில் 150+ நாடுகளிற்கு பரவி, 179,650 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும் 7,068 மரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது. (மார்ச் 16,2020). அதிகரித்து வரும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் WHO நிறுவனம் COVID-19ஐ பேரளவிலான நோய் தொற்றாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் எந்த ஒரு தொற்றும் பதிவாகாத நிலையில் தற்போது 40+ உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் .சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களும் ஊடகத்துறையினரின் முன்னெடுப்பிலும் மக்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.எனினும், இந்நிலை அதிகரிக்காமல் இருக்க சுகாதார அறிவுரைகள் மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் கொண்டு செல்லப்படுவது அவசியம் .

“COVID – 19” என்பது 2019ல் கண்டுபிடிக்கப்பட்ட  கோரோனோ வைரஸ் நோய் என்பதை குறிக்கும். இந்நோயிற்கு காரணமாக அமைவது கோரோனோ வைரஸ் (CoV ) இனத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புது திரிபான வைரஸ் வகை ஆகும்.இது மனிதர்களல்லாத விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோயாகும்.

Virus பரவும் வழிமுறைகள் ஆவன ,
1. தொற்றுள்ளவரிடமிருந்து அருகில் இருப்பவரிற்கு
2. தொற்றுள்ளவரிடமிருந்து சளி போன்ற திரவங்களில் இருந்து
3. தொற்றுப்பரவிய ஒரு பரப்பிலிருந்து

Virus உடலில் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் 14 நாட்களிற்கு உடலில் தங்கும் . எனவே , காவியை பரப்பும் காவியாக 14 நாட்கள் ஒருவர் இருப்பார்.

சுகாதார நடவடிக்கைகளிற்காக 7 அடிப்படை படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

படி 1 : கை கழுவுதல்
குறைந்தது 20 செகண்ட்களிற்காகவாவது , 60% Alcohol கொண்ட சோப் அல்லது hand sanitizer கொண்டு கையை கழுவ வேண்டும் .

படி 2 : முகம்
கண் ,மூக்கு , வாய் ஆவன வைரஸ் பரவுவததற்கான வழிகளாக அமைகிறது. தொற்றுள்ள கைகளால் இப்பகுதிகளை தொடுவதன் மூலம் நோய் பரவலடையும்.

இறந்த மேற்றோலில் இருக்கும் வைரஸ் ஆல் நோயை ஏற்படுத்திட .முடியாது .அவற்றிக்கு உயிருள்ள கலங்கள் தேவை.

படி 3 : தொற்றுநீக்கிகள்
தினசரி பயன்படுத்தும் பரப்புகளின் மீது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். தொற்றுநீக்கிகள் போன்றவையை பயன்படுத்தி இவற்றை அடிக்கடி தொற்று நீக்க வேண்டும்.

படி 4 : தொடுகைகளை குறைத்தல்

தொடுதல்,கைகுலுக்குதல் ,கட்டிபிடித்தல் மற்றும் கூட்டமான பிரதேசங்களில் நடமாடுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.கதவின் கைப்பிடி ,lift என்பவை தொட்ட பின் கைகளை சோப் இட்டு கழுவுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள் .

படி 5 : சுய பராமரிப்பு

வெளிப்பொருட்கள் நம்முடலில் நுழைந்தாலும் நம்முடலில் சாதாரன நிர்பீடன சக்தி அதற்கெதிரே போராடும். நம் நோயெதிர்ப்பு சக்தியை உறுதியாக வைத்துக்கொள்வது நம் கடமையாகும். போதிய உறக்கம், சத்துள்ள உணவு , உடற்பயிற்சி, உள ஆரோக்கியம் என்பன உங்களை வலுப்படுத்தும்.

படி 6 : பிரயாணம் செய்தல்

அண்மையில் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொண்ட ஒருவராயின் தகுந்த தனிமைப்படுத்தல் திட்டங்களிற்கு ஒத்துழைப்பு அளியுங்கள். ஏனெனின்,நீங்களும் ஒரு நோய்க்காவியாக இருக்கலாம்.

படி 7 : மருத்துவ உதவி
காச்சல்,இருமல்,சுவாசக்கோளாறுகள்,போன்ற நோய் அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்திய ஆலோசனையை நாடவும்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர் என உறுதியானால் அச்சம் கொள்ளத்தேவையில்லை.ஏனெனில், தொற்றுக்குளானோரில் 92 % ஆனார் சுகமடைகிறன்றனர் . காலம் தாழ்த்தாமல் மருத்துவ உதவியை நாடுதல் இப்பிரச்சினையை வெகு சீக்கிரமாக குணப்படுத்தும்.

இவ் வைரஸ் தொற்று தொடர்பான அவசர அழைப்பு என்னாவது 117 ஆகும்

பிற நாடுகளில் இத்தொற்று வீதம் வேகமாக அதிகரிக்கின்றது. எதிர் வரும் காலம் இலங்கையின் மிக முக்கிய காலநேரமாக அமையும்.அனைவரும் வெகு கவனத்தோடு செயற்படின் இப்பிரச்சினையை இலகுவாக எதிர்கொள்ளலாம்.
அதிக பயப்படுதலோ உதாசீனமொ நோய் நிலைமையை பாரதூரமாக்கலாம். எனவே,நிலைமையை கருத்திற்கொண்டு புத்திசாலித்தனமாக செயற்படின் சீக்கிரமாக இந்நோய்ந்நிலையில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

 

References

Graphics from https://www.powtoon.com/

Image Courtesy : https://www.thisdaylive.com/index.php/2020/03/16/coronavirus-outbreak-round-the-clock-updates/

Resources

https://www.worldometers.info/coronavirus/

https://www.who.int/health-topics/coronavirus 

 
Tagged : / / / /