புதுக்காதல் கொண்ட பெண்ணே!

Share

உன்னருகே நிற்க வேண்டும்
உன் கதைகளை முதல் கேட்டிட வேண்டும்
கேட்ட பின்பு உன் உணர்வுகளை புரிந்தவராய் பாவிக்க வேண்டும்
கேட்ட வார்த்தைகளின் ஆழத்தை கடந்தும் செல்லாத,போதாமலும் போகாமல் சமமான வார்த்தைகளை இயம்பிட வேண்டும்

உன் சிரிப்பின் எதிரொலியாகவும்
உன் அழுகையின் எதிர்ச்சுவராகவும்
உன் மகிழ்ச்சியை முதல் பகிர்ந்திடும் முகக்கண்ணாடியாகவும்
உன் கவலையை போட்டுலற்றிடும் உன் மனதாகவும்

உன் வெற்றிகளை மற்றுமே விரும்பிட
உன் அசைவுகள் உன் வெற்றியை நோக்கிச்செல்வதை அறிந்திட
உன் நேரம் உன் கனவுகளின் தீனியென அறிந்திட
உன் குரல் கேட்டிடும் ஒரு நிமிடம் போதுமடி எனவும்

யார் நியமித்தது ? நேரம் உறவுகளின் அடித்தளம் என!
மாற்றி எழுத வேண்டும் ; நேரம் அல்ல, உனை நினைக்கையில் ஏற்படும் சிறு புன்னகைத்தான் முக்கியம் என…

அச்சிறு புன்னகை எத்தனை மணித்தியால உரையாடலையும் கடந்திடும் .
இரவுத்தூக்கத்தின் முதல் ,

உன் குறுஞ்செய்தி,உன் குரல்,உன் புகைப்படம் என்பதை விட, அச்சிறு புன்னகை,அவ் நிம்மதி ….

பல புது உறவாளர்களுக்கு இது தெரிவதில்லை,

எது?

நேரம் அல்ல முக்கியம்,

தெரிந்தெடு ..
உன் கண்கள் அழகானவை எனக்கூறுபவனை அல்ல,

உன் கண்களில் தெரிந்திடும் ,நாளையை வென்றிடும் உன் கனவுகள் முக்கியம் என
உன் மனம் உரைத்திடும் படி உனக்கே உணர்த்துபவனை,

இன்றுடன் மறந்து போகும் ,உன் குறுஞ்செய்தியும் ,
பல நாள் அழுகையை மிச்சமிடும் உன் சண்டையையும் விட ,
இந்த நிமிடம் உனக்கு பிடித்ததை செய் எனச்சொல்பவனை..

உன் கனவுகளை துரத்திடும் நேரமடி ,உன்னை பலப்படுத்தும் கனவுகளை துரத்திடு. போ !என்பவனை

அந்தி அவசரத்தில் , உன் காரணங்களை உணர்பவனை

பேசாமலிருந்திடும் போது இவள் என்ன செய்கிறாள் என யோசிப்பவனை அல்ல,
இவள் மனம் என்ன யோசித்துக்கொண்டிருக்கும் என யோசிப்பவனை

ஒன்று சொல்கிறேன் ,புதுக்காதல் கொண்ட பெண்ணே,
உன் மனம் மட்டுமே உன்னை நன்கு அறியும்,
உன் மனம் மட்டுமே உன் கழல் தனியே கடந்த பாதைகளை அறியும்,
எவரிடத்திலும் காதல் கொள் !
எவரிடத்திலும் ஈர்ந்து கொள் !

எவரிடத்திலும் ,உன் மனத்தை அடகு வைத்திடாதே!

எவ்வுறவாய் இருப்பினும்

அடகு வாங்க தயாராய் இருப்பவன் எவனும்
அது படும் பாட்டை அறிவதில்லையடி!

Image Courtesy:

 
Tagged : /