அவள்-5

Vinushayini , 0 Comments

எழுதிட தைரியமில்லா கைகளிடம் பேனைகள் படும்பாடு … அவள் மனம் பட்டது ,
சொல்லிடமில்லா சோகங்கள் , கேட்டிடம் தேடி அலைவது ஓர் ஜீவனையே ;அவள் நம் சதையின் சொந்தக்காரி; அவள் மட்டுமே .

இங்கு இவளுக்கு அவள் கூட தூரமாகி விட …
ஆமாம்.. பெற்றவள் எப்படி தூரமாவாள் ? இது எவ்வூரில் ?
நடக்கும். ..காலப்போக்கில் மனிதர்களுடன் பழமொழிகளும் மாறத்துணிந்தன இவள் கதையில்.

“பெற்ற மனம் கல்லு
பிள்ளை மனம் கல்லு ”

பதினென் வருடக்கடலின் அலைகளை மாத்திரம் கண்ட அவளிற்கு எங்கே திருமணம் தேவைப்பட்டிருக்கும்? அதிலும் மனம் யோசிக்க தொடங்கிய நாளிலிருந்து யோசித்த ஒரே தவம், அவள் கனவு!
எவ்வாறு அதை விட்டு விடுவாள் என இவ்வுலகம் எதிர்பார்க்கும்?

கனவைக்கலைந்து திருமணப்பட்டை மணக்க இடப்பட்டது கட்டளை..
முதல் முறையாக பெற்றவள் முன்னின்று இல்லை என்றிட்டாள்.

கல் நெஞ்சம்! அல்ல நெஞ்சங்கள் !

ஒரு நொடியில் இச்சிதைப்பிண்டம் இவ்வுலகில் எங்கு தனியே உலவும் என சற்றும் யோசித்திடாமல் பிண்டத்தில் சொந்தக்காரியும் விலகிவிட….

எது எங்கு பிணைந்து, தன் ஞாயத்திற்கான குடை நிழலை அடைந்தாலும் , ஒரு மனதை தனியே அலைய விட்டு பாருங்கள், உங்கள் சாபம் எங்கெல்லாம் அம்மனதை இழுத்தது செல்லும் என !

இறுதியில் (இல்லை ,இது தான் அனை[ணை ]த்திடும் ஆரம்பம்)…

நிழல் குடையாய் ஒரு நட்பு.. எதிர்பாரா விதத்தில்…
“காய்ந்த நிலத்தில் புற்களுக்கு கூட சாமரம் வீசப்படுமாம்” – பழமொழி அல்ல சொல்லத்தோன்றிய எதிர் மொழி .

எங்கே சாய்ந்திடும் இவள் மனம்!உதறிசென்ற பிண்டத்தின் சொந்தத்திடமா?அல்லது முளைத்த புல்லிடமா?
கணத்தில் சாய்ந்திட்ட
அவள்!

Image Courtesy: https://cdn.pixabay.com/photo/2018/12/07/18/17/lonely-3862214_960_720.jpg