SLUG XIII – 2019 -இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்

Share

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் அதி உன்னதமான விளையாட்டு போட்டி தொடரான SLUG XIII ,கடந்த வாரம் ,ஆவணி மாதம் 26ம் திகதி ,அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது . இவ்வாரம்ப வைபவம் ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

வரலாற்றில் 13ஆவது தடவையாக இடம்பெறும் 2019ம் ஆண்டிற்கான போட்டித்தொடர் ருஹுனு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற உள்ளது. 14 பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 22 போட்டிகளிற்காக 1000 ற்கும் அதிகமான போட்டியாளர்கள் ருஹுனு பல்கலைக்கழகத்தை நோக்கி விரைந்துள்ளனர்.

1980 ம் ஆண்டு பேராதனைப்பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் ஆரம்பமான இத்தொடர் மூன்று வருடங்களிற்கு ஒரு முறை (1989 ம் ஆண்டு தவிர) இடம் பெற்று வருகிறது.

இப்போட்டி வரலாற்றில் அதிக தடவைகள்
;6 தடவைகள், ஒட்டுமொத்த சூரர்களாக வாகை சூடி கொண்டவர்கள் , கொழும்புப்பல்கலைக்கழக வீரர்களே.

கடந்த முறை , அதாவது SLUG XII இன் வெற்றியாளர்களாக மகுடம் சூடியவர்கள் ஸ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகவீரர்கள் .

ஆரம்ப விழாவின் போது பியூமி அஹின்ஸ மற்றும் கலனா விக்ரமாராச்சி என்பவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது .
இத்துடன் இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு ஒன்றியத்தின்(SLUSA ) தலைவர் பேராசிரியர் திலக் D .கமகே அவர்கள் உரையாற்றியதுடன்,ருஹுனு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் E .P .S .சந்தன அவர்கள் நன்றியுரை ஆற்றினார் .
அழகியல் அங்கங்களால் நிரம்பிய விழாவில், தென்மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர,மற்றும் பிற பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் , விளையாட்டு நிர்வாக அதிகாரிகள் ,மற்றும் பலர் இணைந்திருந்தனர்.

இத்தொடரின் உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்விற்கு முதலே ரக்பி ,ஹாக்கி,டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் நிறைவு பெற்றதுடன், புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தன புர,சபாரகமுவா பல்கலைக்கழகங்கள் 1ம்,2ம்,3ம் இடங்களைப்பெற்றுள்ளன.
மிகுதி விளையாட்டுக்கள் அனைத்தும் ஓகஸ்ட் 27ம் திகதி முதல் செப்டம்பர் 7ம் திகதி வரை இடம்பெற உள்ளன.

பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களின் மனதைரியத்திற்கும் ,பலம்,சக்தி,மற்றும் அனைத்து நலன்களிற்காகவும் FOS Media எங்களிடமிருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு மேலதிக தகவல்களையும் கள நிலவரங்களையும் அறிந்துகொள்ள #SLUGXIII2019 எனும் hashtag ஐ சமூக வலைத்தளங்களில் follow செய்யுங்கள்.

 

மேலதிக களநிலவரங்களை அறிந்துகொள்ள எங்கள் உத்தியோகப்பூர்வ இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்
.
Blog பதிவுகள்/ ஒளிப்பதிவுகள்/புள்ளி விபரங்கள் மற்றும் பல…
https://fos.cmb.ac.lk/slug2019/

நேரலை கள நிலவரங்களிற்கு எம்மோடு இணைந்திருங்கள்…
#WeReportBestAtFirst
#FOSMedia

 
Tagged : /