காதல் கடக்கும் அடுத்த பரீட்சை

Share

எழுதி முடிய முன்பே மை காய்ந்தது போல்
கனவு முடிய முன்பே முழித்து பார்த்தது போல்
ஒரு நொடி முடிவில் ஓருலகமே இருண்டிருக்கும்
மரணம் என்று நினைத்தீர்களா
இல்லை நிஜமென நம்பிய மாயம்

ஆமாம் இரண்டுமே மாயம் தான்,

மரணத்தை விட புரியாத மர்ம மாயம் ஒன்டுளது…

காதல்….

காலங்காலமாய் காதல் பல படிகளை தாண்டி,
பரீட்சைகளை தாண்டி….

மேல் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது
இல்லை என சொல்லவில்லை..
நாடுகளை தாண்டியது, (வெளிநாட்டு மாப்பிள்ளை எல்லோ… போ போ…)
ஊரையும் தாண்டியது (கொழும்புல பெரிய மாப்பிள்ளை யப்பா )
சொகுசு நிலையையும் தாண்டியது ( ரெண்டு பேரும் சம்பாதிக்கினம் . so கட்டட்டும் )
மொழிகளை தாண்டியது,
மதங்களையும் தள்ளி மேலே வந்தது,

ஆனால், இன்னும் இந்த சாதியை கீழ் தள்ளி மேலே வர மட்டும் , இந்த காதலுக்கு தகுதி காணாதப்பா…

என்று வரும் அது மேலே?
என்று , அடுத்த சந்ததிக்கு, ‘நம் சாதி இது’ என கூறுவது மகா பாவம் ஆகும்?

ஒழுக்கத்தாலயும், படிப்பாலயும், கடும் முயற்சியாலயும் உயராத உயிர் பெறுமதி,
இந்த “சா…..” ஆல் கூடிடுதாம்..

சிரிப்பதாய் பாவித்து அழுதிடுவோம், சாதியை பற்றி வாய் எடுத்து பெருமை பேசிடும் அனைவரும்….
அனைவரையும் காதலிக்க உரிமை இல்லையாம்,

காசு இல்லாட்டியும் பரவால்ல, படிக்காட்டியும் பரவால்ல,

நம் சாதியில் பார்த்து காதலி தம்பி..
சாதி முக்கியம் தம்பி…..” ஆம்…

 

Image courtesy: https://bit.ly/3uRyIy9

 
Tagged : / /