அவள்-3

tamil, Vinushayini 0 Comments

பாடசாலைக்கல்வியும் முடிந்து விட “வேறு எதையும் படி”,”உயர்தரத்தை மீண்டும் படி” என பல அறிவுரைகளும் காதருகே பாய,ஆழமறியா மழலையாய் ,எதுவும் வேலையில் இணைந்து விடலாமென்ற எண்ணம். யோசித்திடாமல் செய்த விண்ணப்பம், இறுதியில் ஒரு மேற்கத்தேய நிறுவனத்தில் இடம்பெற்ற நேர்முகபரீட்சையில் தேர்வாகிடும் அவளுக்கு,அவ்வாய்ப்பு
தனக்கான வாய்ப்பாக தெரிந்ததே தவிர அதனால் தன்வாழ்வில் என்ன என்ன மாற்றம் ஏற்படும் என சிறிதும் யோசிக்கா மடந்தையாய் தன் வாழ்வியலை மாற்றிக்கொள்கிறாள். தவறான பாதை எனச்சொல்லி விட முடியாதெனினும் அவள் தடம்பிரண்ட முச்சந்தியாக சொல்லி விட அச்சம் கொள்ள தேவையில்லை:இதற்கு ஊன்று கோலாக
இருந்த அந்த “கைத்தொலைபேசியும்” சான்று.
கைத்தொலைபேசியினால் நேர்ந்திடும் தீமைகளைப்பற்றி பாடசாலைக்காலங்களில் எழுதிய கட்டுரைகள் கூட அவளை அம்மயக்கத்திலிருந்து எழவிடவில்லை என்றே கூற
வேண்டும்.

இந்த காலத்திலும் இத்தொலைபேசியால் வாழ்க்கை தடம் மாறக்கூடும் என்ற கருத்தை ஒத்துக்கொள்ளும் யாரும் இருப்பாரா என்பது சந்தேகம் தான்.இத்துடன்,

புதிதாக திறந்திட்ட முகப்புத்தக கணக்கு. இதன் விளைவாக வேலைத்தளத்தில் முகம் பார்த்த அனைவரது
கோரிக்கைகளையும் ஏற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.
ஏற்கா விட்டாலோ,காது பட கேட்க வேண்டி இருக்கும்,”என்ன,முகப்புத்தகத்தில் நண்பராக முடியாத கீழ் இனம் அல்ல நாம்,உன் எண்ணங்களால் இங்கு மிகவும் அடி படுவாய்” .பிறர்க்கு இது வெறும் நகைச்சுவையாய் இருக்க இவள் மனம் பட்ட பாடு. நாம் என்ன செய்ய வேண்டுமென யோசித்திடும் இடைவெளியில் ,மனம் பதறி, நம்மை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்துடன் ஏற்கிறாள்,அக்கோரிக்கைகளை.அடுத்து வரும் குருஞ்செய்திகளுக்கும் பதில் அளித்திட வேண்டுமே! என செய்வதறியாது இருக்க ஏற்பட்டு விடும் பல புதிய நட்புக்கள்….

வேலைத்தளத்திற்கு வந்து செல்லும் அதே வழியிலே வீடு செல்லும் இன்னோர் சக நண்பி(அதே வேலைத்தளத்தில் வேலை செய்திடுபவள்)…

வயதில் மூத்தவளாய் கிடைத்திட்ட அந்த நட்பபை ஓர் நம்பிக்கையாய் கொள்ளும் அவள்…

 

Image Courtesy: http://cos.h-cdn.co/assets/15/36/980×490/landscape-1441372936-walkinghome.jpg